உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் பாஜக கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசினார்.

17-02-2026 | 16:45


மேலும் இன்றைய போட்டோ

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு யானைகளின் அணிவகுப்பு நடந்தது.

20-02-2026 | 10:21


கிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் 400 கிமீ தூர குறுகிய இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் லாஞ்சர்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றை நாங்கள் பயன்படுத்தினால் எதிரிகளை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

20-02-2026 | 10:16


நம் விமானப்படையின் சாரங் மற்றும் சூரிய கிரண் படைப்பிரிவினர் நடத்தும் வான் சாகச நிகழ்வு ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் அரண்மனைக்கு மேல் இன்றும் 22ம் தேதியும் நடக்கிறது. இதையொட்டி சாரங் படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

20-02-2026 | 10:03


ஹாய் ஆக அமர்ந்து ஓய்வெடுக்கும் நீர் கோழிகள். இடம்: அரசடி விநாயகர் கோவில் குளம், பழைய தாம்பரம்.

20-02-2026 | 08:04


மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் ஷிவ் ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்வில் சிவாஜி வேடமிட்டு வந்த சிறுவனின் மிடுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: இந்தூர், மத்திய பிரதேசம்.

20-02-2026 | 07:04


விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., பேசினார்.

19-02-2026 | 22:52


புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை முகத்துவாரத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று படகு விபத்துக்குள்ளான இடத்தை டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

19-02-2026 | 22:50


காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மகளிர் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உ வே சா அவர்களின் 172 வது பிறந்தநாள் விழா மற்றும் தொல்லியல் சார் பதிவுகள் என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்.

19-02-2026 | 22:50


தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன..

19-02-2026 | 22:49