இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உபி மாநிலம் பிரயாக்ராஜில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தொண்டு நிறுவனம் சார்பில் ஹோலி பண்டிகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்த இந்த குழந்தைகள் வெளியே வந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பலரது நெஞ்சங்களை மகிழ்வித்தது.
02-03-2026 | 09:24
சிவகங்கை மாவட்டம் கல்லல் சோமசுந்தரேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் மாசி மகா தேரோட்டம் நடைபெற்றது.
02-03-2026 | 04:33
கேக் வெட்டி கொண்டாட்டம் : தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்பத்தினர் முன்னிலையில் இன்று கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
01-03-2026 | 22:08
விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
01-03-2026 | 14:14
2 தேர்வு பொது தேர்வு துவங்க உள்ளதை யொட்டி வகுப்பறையில் தேர்வு எண் எழுதும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.
01-03-2026 | 14:14
விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
01-03-2026 | 14:13
கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
01-03-2026 | 14:12