இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
குஜராத் தலைநகர் காந்திநகரில் ஹோலி பண்டிகைக்கு முந்தைய இரவில் தீமையை அழிப்பதன் அடையாளமாக நடத்தப்படும் ஹோலிகா தகனம் நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
03-03-2026 | 08:03
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தார்.
03-03-2026 | 08:00
பல்வேறு கோவில்களில் இருந்து மெரினா கடற்கரையில் தீர்த்தவாரிக்காக வந்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சிவபெருமான்.
03-03-2026 | 07:50
ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் ஜெருசலேம் புறநகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலால் சாலையில் பெரிய பள்ளம் உருவானதுடன் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.
03-03-2026 | 06:23
புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
02-03-2026 | 14:34
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடரும் போராட்டத்தால் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இடம்: சங்கனூர், கோவை.
02-03-2026 | 14:34
ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, கூடலூர் கோடமூலா கிராம பெட்ட குரும்பர் பழங்குடி மக்கள் நிலம் மற்றும் அடிப்படை பிரிச்னைக்காக மனு அளிக்க வந்தனர்.
02-03-2026 | 14:33