உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. அதில், பங்கேற்ற பெண்கள்.

08-03-2026 | 22:24


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலால் நம் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. இதன் காரணமாக, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பல பகுதிகளில் சிலிண்டர்களை பெற, காஸ் ஏஜென்சிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்.

11-03-2026 | 07:06


உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வெயில் சதமடிக்கத் துவங்கிவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதன் அழகை ரசிப்பதை விட, தகிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

11-03-2026 | 06:40


வெவ்வேறு மரங்களின் கிளைகளோடு இலைகளும் இணைந்ததால் சூரியனின் வருகையை தடுத்து இதமான நிழல் தரும் பாதை உருவானதோ. இடம்: மதுரை வலையங்குளம் அருகே சோளங்குருணி.

10-03-2026 | 22:21


சட்டசபை தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ள மத்திய ரிசர்வ் படை போலீசார் கோவை சுந்தராபுரம் பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்த்தினர்.

10-03-2026 | 22:20


மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு மேம்பாலத்தின் தூண்களில் பொருத்தப்படவுள்ள ஓடு பாதையில் முன்வார்பு காங்கிரீட் கட்டுமானம்.

10-03-2026 | 22:19


பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா கலந்து கொண்டனர்

10-03-2026 | 22:18


தேர்தல் முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலியில் துணை ராணுவ படையினர் திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

10-03-2026 | 22:17


அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை மணலி அருகே எல்.பி.ஜி சமையல் கேஸ் நிரப்புவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் காலி சிலிண்டர்களுடன் காத்து நிற்கின்றன.

10-03-2026 | 22:16


தமிழ்நாடு பாரம்பரிய சமத்துவ சமூகம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். இடம்: தாம்பரம்

10-03-2026 | 22:15