இன்றைய போட்டோ
விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங்., கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்க கூடாது என அதே கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
30-03-2026 | 06:26
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர்.
22-11-2026 | 14:43
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது.
22-11-2026 | 14:42
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
22-11-2026 | 14:42
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது.
22-11-2026 | 14:40
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது.
22-11-2026 | 14:39