உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை அவிநாசி ரோடு, லீ மெரிடியன் ஓட்டல்லில் டெக்னாலஜி மீட் எனும் கருத்தரங்கு நடந்து. இதில் கலந்து கொண்ட தொழில் துறையினர்.

14-05-2026 | 17:20


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், நியாய விலை கடைகளில் பாக்கெட் முறையை அமல்படுத்திட கோரி உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20-07-2026 | 21:50


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இசைக்கலைஞர் அரசு வேலை கேட்டு பறை இசை கருவி உடன் வந்ததால் போலீசார் விசாரித்தனர்.

20-07-2026 | 21:44


முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1000 தீர்க்கும் மேற்பட்டோர் தாங்கள் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து கோஷம் எழுப்பினர்.

20-07-2026 | 21:42


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மண் ஜாடிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது... இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.

20-07-2026 | 21:41


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு புகார் அளிக்க உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு வந்த மக்கள் ராஜாஜி சாலையில் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர்.

20-07-2026 | 21:40


அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழிப்பாதை, கான்கிரிட் கற்களால் அடைக்கப்பட்ட நிலையில், குறுகிய பாதை வழியாக செல்ல முடியாமல், பள்ளி மாணவர்கள், காத்திருந்தனர். இடம். திருவொற்றியூர்

20-07-2026 | 21:40


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

20-07-2026 | 21:38


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு குடங்களுடன் மனு கொடுக்க வந்த வேடசந்தூர் விருதலைப்பட்டி சேர்ந்த மக்கள்.

20-07-2026 | 21:37


சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் இருப்பது தெரியாமல் மாடியில் மனு கொடுப்பதற்காக பல முதியவர்கள் படிக்கட்டில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

20-07-2026 | 21:37