இன்றைய போட்டோ
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-05-2026 | 06:36
மேலும் இன்றைய போட்டோ
ஹிமாச்சல் மாநிலம் ஜோப்ராங் கிராமத்தில் பாயும் சந்திராபாகா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தை மூழ்கடித்தது.
20-07-2026 | 06:49
ஜம்மு காஷ்மீரில் தொடர் கனமழை காரணமாக பூஞ்ச் மாவட்டம் மெந்தர் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
20-07-2026 | 06:40
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
19-07-2026 | 22:05
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று மாலை பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
19-07-2026 | 22:05
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.
19-07-2026 | 22:05
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள ஜெயவானி ஐஸ் கம்பெனியில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19-07-2026 | 22:04