உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.

23-05-2026 | 18:05


மேலும் இன்றைய போட்டோ

கோவை சத்தி ரோடு அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள் சாலையின் ஓரங்களில் மறு நடவு செய்யப்பட்டுள்ளன. இடம்: கரட்டுமேடு

17-07-2026 | 16:52


கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் திமுக கவுன்சிலர்கள் இடையே நடந்த சண்டையில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரியின் சேலையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்.

17-07-2026 | 16:52


ஆடி வெள்ளியை முன்னிட்டு பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் முன்பு பீடத்தில் உப்பு கொட்டி வழிபாடு செய்த பக்தர்கள் .

17-07-2026 | 16:51


செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர்.

17-07-2026 | 16:51


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பேரணி நடைபெற்றது.

17-07-2026 | 16:50


திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் ஷிப்ட் முறையை முறைபடுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

17-07-2026 | 16:50


புதுச்சேரியில் அனல் காற்று வீசியதால் சுற்றுலாவிற்கு வந்த பயணிகள் தொப்பி போட்டுக்கொண்டு உலா வந்தனர்.

17-07-2026 | 16:50


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .

17-07-2026 | 16:50


விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சாரண சாரணியர் இயக்க செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சேகர் பேசினார்.

17-07-2026 | 16:50