இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24-05-2026 | 20:10
அடையாறு ஆற்றில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள். இதனால் நீரோட்டம் தடை படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இடம் : கோட்டூர்புரம்
24-05-2026 | 20:01
சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு குழாயில் வரும் தண்ணீரை தேடிக் குடிக்கிறது.இடம் : தரமணி
24-05-2026 | 15:46
புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
24-05-2026 | 15:44
பொள்ளாச்சி அம்பராம்பாளையம், ஆழியாறு ஆறு செல்லும் பாதை பார்ப்போரை ரசிக்க வைக்கிறது.
24-05-2026 | 14:31
சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் காற்று வாங்கியும் குளித்தும் மகிழ்ந்தனர்.
24-05-2026 | 14:31
திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவேகானந்தா சேவா அறக்கட்டளை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
24-05-2026 | 14:30
திருப்பூர், அயங்காளிபாளையம் வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
24-05-2026 | 14:30
சிட்டி யூனியன் வங்கி சார்பில் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சுற்றுசூழல் மாசு குறைத்து பசுமை வழியில் தொழில் வளர்ச்சி எட்டுவது குறித்த பயிலரங்கம் கோவை ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்தது. இதில் சூழலை பாதுகாத்து வளர்ச்சியை பெருக்கும் வழிகாட்டி புத்தகத்தை (இடமிருந்து) சிட்டியூனியன் வங்கி பொதுமேலாளர் சுப்ரமணியம், கே.பி.ஜி., அண்ட் கம்பெனி நிர்வாக இயக்குனர் முத்துசாமி, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் விஜய்ஆனந்த், ராஜ் பிரியா சிட்பண்ட் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜு, ஈரோடு தீபா நிறுவன குழும நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன், சீனிவாசன் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.
24-05-2026 | 14:29