உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி அரசு பள்ளி நூலகர்களுக்கான எழுத்துத் தேர்வு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்தது முன்னதாக போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர்.

31-05-2026 | 20:30


மேலும் இன்றைய போட்டோ

மஹாராஷ்ரா மாநிலம் நவி மும்பையின் சிற்றோடை பகுதிக்கு ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகள் வந்துள்ளன. இப்பறவைகளுக்குப் பிடித்த உணவான நீலப்பச்சை பாசிகளும், இறால்களும் இங்கு தாரளமாக கிடைப்பதால் இவை அதிகளவில் வருகின்றன.

03-06-2026 | 09:24


காலை வேளையில் இரண்டடுக்கு வானவில் தென்பட்டது. இடம்: திருப்பூர்.

03-06-2026 | 09:15


கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் சிறிய மதகிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

03-06-2026 | 08:49


விழுப்புரம் கோலியனூர் குச்சிபாளையம் ரயில்வே கேட் உள்ள இடத்திலேயே சுரங்கப்பாதை அமைக்காமல் வேறு இடத்தில் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

02-06-2026 | 23:24


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

02-06-2026 | 23:23


மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்ததாரரை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்.

02-06-2026 | 23:22


தென் மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பட்டாம்பூச்சிகள் வர தொடங்கியது. இடம்: காரமடை

02-06-2026 | 23:20


பட்டுப்போன மரமாக இருந்தாலும் இந்த நீர் காகங்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாக உதவும் மரம். இடம் : வாலாங்குளம்.

02-06-2026 | 23:19


கோவையில் இயற்கையின் ஓவியம்! கார்மேகங்கள் சூழ்ந்த கோவையில், நகரின் தொலைதூரப் பகுதியில் பெய்யும் மழையின் காட்சி. இடம்: காந்திபுரம், கோவை.

02-06-2026 | 23:19