உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மெரினா கடற்கரையில் நீல கொடி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள், மக்கள் நடந்து செல்வதற்கான பாதையில் தடைகளை மீறி இருசக்கர வாகனத்தில் போலீசார், மக்கள் வலம் வருகின்றனர்.

11-07-2026 | 21:56


மேலும் இன்றைய போட்டோ

மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நகரின் பாரம்பரிய தெருக்கள் கலை சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. காலா கோடா ஆர்ட் அவென்யூ என பெயரிடப்பட்டுள்ள இந்த கலை சாலைகள் திறக்கப்பட்டன. அந்த சாலை வழியே நடந்த பெண் ஒருவரை வரவேற்ற கண்ணாடி சிலை மனிதன்.

15-07-2026 | 06:50


நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் வன விலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஆபத்தை உணராமல் கரடிக்கு மிக அருகில் வாகனங்களை நிறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.

15-07-2026 | 06:45


சென்னை தண்டையார்பேட்டை ரயில் பணிமனையில் எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் ரயிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வசதியாக 800 மீட்டர் தூரத்திற்கு ஸ்டீல் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

15-07-2026 | 06:40


மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலம் வாயிலாக 3 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். இதில் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான அனில் மேனனும் ஒருவர்.

15-07-2026 | 06:35


பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் முன்பு இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

15-07-2026 | 06:17


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

13-07-2026 | 16:03


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்க கேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

13-07-2026 | 16:03


கடலூர் பழைய வண்டி பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

12-07-2026 | 18:01


புதுச்சேரி கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் கரை நோக்கி வந்த மீனவர்கள்.

12-07-2026 | 18:01