உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தினமும் கொட்டப்படும் குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள சதுப்பு நிலத்தில் கலந்து அப்பகுதியே கருமஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் சென்னையின் நன்னீர் பகுதியாக விளங்கும் சதுப்பு நிலம் கழிநீர் குட்டையாகி நிலத்தின் தன்மையே மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

26-07-2026 | 08:00


மேலும் இன்றைய போட்டோ

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

22-11-2026 | 12:07


குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.

22-11-2026 | 12:06


ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.

22-11-2026 | 12:06


ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

22-11-2026 | 11:06


ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள்.

22-11-2026 | 10:54


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர்.

22-11-2026 | 09:36


கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

22-11-2026 | 09:35


நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி.

22-11-2026 | 09:34


கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண்.

22-11-2026 | 09:34