உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

26-07-2026 | 21:32


மேலும் இன்றைய போட்டோ

யூனியன் பிரதேசமான லடாக்கின் திராஸ் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழந்த மினாமார்க் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட புல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு காத்திருந்த நபர்.

28-07-2026 | 06:32


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து மேற்கு வங்கத்தின் சீல்தா முதல் எஸ்பிளனேட் வரை பாஜவினர் மூவர்ண கொடி ஏந்தி பேரணி நடத்தினர். இடம்: கொல்கட்டா.

28-07-2026 | 06:28


சென்னையில் திடீரென போல் கருமேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டன.இடம் :ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே, அண்ணாசாலை.

27-07-2026 | 22:38


மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை

27-07-2026 | 22:37


தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27-07-2026 | 22:23


பழச, புதுசா ஆக்குறாங்க.! கோவை நேரு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

27-07-2026 | 15:58


பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்

27-07-2026 | 15:58


புதுச்சேரி என்சிசி மாணவ மாணவியர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாகச பயணத்தை மேற்கொண்டனர்.

27-07-2026 | 15:56


கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.

27-07-2026 | 15:56