இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஓய்வூதியம், பழைய பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ஸ், ரிட்டுயர்டு எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் போராட்டம் நடத்தினர்.
04-08-2026 | 19:42
விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகே ரேஷன் அரிசி 30 மூட்டை அளவில் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டையை மாவட்ட இணை பதிவாளர் விஜய சக்தி தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது
04-08-2026 | 19:38
மாலை பெய்த மழையால் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் குளம் போல தேங்கியது அதில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்.
04-08-2026 | 19:36
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில் த.வெ.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
04-08-2026 | 13:26
பந்தலூர் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தேயிலை தோட்டங்களின் அழகிய காட்சி பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
04-08-2026 | 07:07
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தொடங்கி 10 ஐரோப்பிய நாடுகள் வழியாக பாய்ந்து கருங்கடலில் கலக்கும் முக்கிய நதிகளில் ஒன்று டானூப் நதி. ருமேனியா நாட்டின் ரசோவா பகுதியில் பாயும் இந்நதியின் வழித்தடத்தில் நீர் குறைந்து மணல் திட்டுக்கள், பாறைகள் வெளியே தெரிந்தன.
04-08-2026 | 07:00
திருநெ ல்வேலி பாறையடி பகுதியை சேர்ந்த விவசாயியின் தோட்டத்தில் சேனைக்கிழங்கு செடியில் அரிதாக பூத்துள்ள உள்ளங்கை அளவுள்ள இந்த பூ, நான்கு நாட்களுக்கு மட்டுமே மலர்ந்திருக்கும்.
04-08-2026 | 06:54