இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
குன்னூரில் நிலவும் இதமான காலநிலையில் மலை பாதையில் இருந்து காணப்படும் சமவெளி பகுதிகள் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
08-08-2026 | 07:43
திருவொற்றியூர் சுங்கச்சாவடி- எண்ணூர் விரைவு சாலை சந்திப்பு அருகே பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் செடி, கொடிகள் படர்ந்தும் மண்ணோடு மண்ணாக புதைந்தும் வீணாகி வருகின்றன.
08-08-2026 | 07:38
ஹிமாச்சல பிரதேசத்தின் குலு பகுதியில் தொடர் மழை காரணமாக பியாஸ் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
08-08-2026 | 07:33
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை பார்க்க வந்த கொருக்குப்பேட்டை கேசிஎஸ் கல்லூரி மாணவியர்.
08-08-2026 | 07:30
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி மாணவியர் கைத்தறி புடவைகளை அணிந்து வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
08-08-2026 | 07:26
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி என்பதை வலியுறுத்தி பாஜ பேரணி நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் பவானிபூரில் பாஜவை சேர்ந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த பேரணியில் மக்கள் திரளாக பங்கேற்றனர்.
08-08-2026 | 07:22