இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஹிமாச்சல பிரதேசத்தின் குலு பகுதியில் தொடர் மழை காரணமாக பியாஸ் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
08-08-2026 | 07:33
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை பார்க்க வந்த கொருக்குப்பேட்டை கேசிஎஸ் கல்லூரி மாணவியர்.
08-08-2026 | 07:30
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி மாணவியர் கைத்தறி புடவைகளை அணிந்து வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
08-08-2026 | 07:26
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி என்பதை வலியுறுத்தி பாஜ பேரணி நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் பவானிபூரில் பாஜவை சேர்ந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த பேரணியில் மக்கள் திரளாக பங்கேற்றனர்.
08-08-2026 | 07:22
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி ஜரூராக நடந்து வருகிறது.
08-08-2026 | 07:17
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள வயல்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
07-08-2026 | 22:23