உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு விலங்கியல் பூங்கா நம் நாட்டில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. பூங்காவின் பரந்து விரிந்த இயற்கை சூழல் சிறப்பான பராமரிப்புடன் சேர்ந்து இங்குள்ள சிங்கங்களுக்கான பகுதி சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது.

09-08-2026 | 07:00


மேலும் இன்றைய போட்டோ

பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உடன் எம்.எல்.ஏக்கள்.

10-08-2026 | 17:37


திருநீர்மலை ரங்கநாத சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மழை நீரை சேகரிக்கும் பணி துவக்கம்

10-08-2026 | 17:36


புத்தகம் கட்டுநர் பயிற்சி முடித்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், அரசு அச்சகங்களில் பணி வேண்டி சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10-08-2026 | 17:36


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தில் இன்று முதல் பஸ் தொடங்கப்பட்டதால் காமராஜ் சிலை அருகே பூந்தமல்லி ஆவடி பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்

10-08-2026 | 17:36


ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதமான காலநிலையை ரசித்தவாறு சுற்றுலா பயணியர் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

10-08-2026 | 08:05


நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேச பக்தியை மக்களிடையே பரப்பும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரதான சாலையில் பிரமாண்ட தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்துச் சென்ற மக்கள்.

10-08-2026 | 07:57


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா மஹாராஷ்டிராவில் 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இதற்காக அம்மாநில தலைநகர் மும்பையில் விழா பந்தலுக்கு பக்தர்கள் புடைசூழ மேள தாளங்களுடன் எடுத்து செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.

10-08-2026 | 07:36


மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் நர்மதை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டோரி- ஜபல்பூர் வழித்தடத்தில் உள்ள ஜோகிதிகாரியா பாலம் வெள்ளநீரில் முற்றிலும் மூழ்கியது.

10-08-2026 | 07:25


கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம், அருகே.

09-08-2026 | 18:12