உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வலியுறுத்தி எமதர்மன் மற்றும் சித்திர குப்தன் வேடத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவியர். இடம்: அண்ணா சாலை, சென்னை.

21-08-2026 | 06:30


மேலும் இன்றைய போட்டோ

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 83 கோடி ரூபாயில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

23-08-2026 | 07:00


நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மனித உருவ ரோபோக்களுக்கான உலக விளையாட்டு போட்டியின் துவக்க விழா நடந்தது. அப்போது போட்டிக்கு தயார் நிலையில் இருந்த ரோபோக்கள்.

23-08-2026 | 06:56


உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 1923ல் கட்டப்பட்ட லக்ஷ்மன் ஜூலா பாலம் மிகவும் பழமையானதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது. அதன் அருகிலேயே புதிதாக பஜ்ரங் சேது பாலம் தற்போது கட்டப்பட்டுள்ளது. கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் இந்த நேரத்தில் இந்த பாலத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

23-08-2026 | 06:52


சிவகங்கை மாவட்டம் கீழடி 11வது கட்ட அகழாய்வில் குவியல் குவியலாக கிடைத்த சுடுமண் கிண்ணங்கள் மற்றும் ஐந்து அடுக்கு உறை கிணறு.

23-08-2026 | 06:48


வெயிலின் தாக்கத்தால் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் வலை போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள். இடம்: குப்பக்குறிச்சி குளம், நெல்லை மாவட்டம்.

23-08-2026 | 06:45


சென்னை தின கொண்டாட்டம் மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா அரங்கில் நடந்தது; இதில் முரசு நடனம் உட்பட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

23-08-2026 | 06:40


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு.

22-08-2026 | 16:03


ஓணம் பண்டிகையை முன்னிட்டு பந்தலூர் அருகே போத்து கொல்லி பழங்குடியினர் மறுவாழ்வு மையத்தில் நாவா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பூக்கோலமிட்டு மகிழ்ந்தனர்.

22-08-2026 | 06:35


சட்டசபை நிகழ்வை காண சென்னை தலைமை செயலகத்திற்கு வந்திருந்த சேலம் ஸ்ரீ சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவியர், அந்த வளாகத்தில் நீண்ட நேரமாக வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

22-08-2026 | 06:24