இன்றைய போட்டோ
குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணை 100 அடி கொண்டதாகும். இங்கு 2 மின் உற்பத்தி பிரிவு வாயிலாக தலா 50 மெகாவாட் என 100 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. பவானி ஆற்றின் நீர்வரத்து மற்றும் குந்தா மின் வட்டத்தின் பிற மின் நிலையங்களில் இருந்து நீர் வெளியாகும் நீர் ஆகியவற்றை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீர் ததும்பி இருப்பதால் மின்உற்பத்திதடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
26-08-2026 | 22:40
மேலும் இன்றைய போட்டோ
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.
22-11-2026 | 12:07
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.
22-11-2026 | 12:06
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.
22-11-2026 | 12:06
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள்.
22-11-2026 | 10:54