உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பசுமை செழிக்கட்டும்: கவாத்து செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் இலைகள் தளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன. இது காண்போரை வசீகரிக்கிறது. இடம்: திருப்பூர்,உடுமலை பெரியகோட்டை.

28-08-2026 | 22:17


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி மற்றும் பிற சுற்றுலா மையங்களுக்கு செல்ல மலை ரயில் மற்றும் பிற வாகனங்களில் ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலாபயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மனதை இதமாகும் இத்தகைய ஆத்மார்தமான பயணங்களுக்கு முடிவேது.

02-09-2026 | 22:24


மேகம் கருக்குது. மழை வர பார்க்குது; கோவை மேட்டுப்பாளையம்- குன்னூர் ரோட்டில் மழை வருவதற்கு முன்பு வானம் கருத்து இருளாக காணப்படுகிறது.

02-09-2026 | 22:24


உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதி 230 அடி என்ற எச்சரிக்கை அளவை தாண்டி 231 அடியை எட்டி உள்ளது. இதனால், துணை நதிகளின் கரையோரப் பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உபியின் கான்பூரில் உள்ள பாண்டு நதி கரைபுரண்டு ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

02-09-2026 | 22:24


ஆதாரம் ஆராய்ச்சி மற்றும் நலவாழ்வு நிறுவனம் சார்பில் சுப்பு - 75 விருது வழங்கும் விழா சென்னை ஆர் கே கான்வென்ஷன் சென்டரில் நடந்தது. இதில் வழக்கறிஞர் ஜெகந்நாத்திற்க்கு சுப்பு - 75 விருதை வழங்கிய தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. உடன், இடமிருந்து ஆதாரம் அறக்கட்டளை செயலர் ஹேமா கோபாலன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன், சமய சொற்பொழிவாளர் மதுசூதனன், ஆதாரம் அறக்கட்டளை நிறுவனர் திராவிட மாயை சுப்பு, பொருளாளர் மீனாட்சி ஸ்ரீதர், தமிழலை ஆன்மீகம் நிறுவனர் வெங்கடசுப்ரமணியன். இடம்: மயிலாப்பூர்

02-09-2026 | 21:22


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வெங்காயம் எடை போடும் பணி நடந்தது.

02-09-2026 | 21:20


சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தனது பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வந்து சென்ற முதல்வர் விஜயை ஆர்வமுடன் மொபைல் போனில் புகைப்படம் பிடிக்கும் மக்கள்.

02-09-2026 | 21:20


திருப்பூரில், நூல் விலை உயர்வு குறித்து அனைத்து தொழிற்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் சைமா சங்க அலுவலகத்தில் நடந்தது.

02-09-2026 | 21:19


திருப்பூர், ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சாய் கிருஷ்ணா நுண்கலை பள்ளி சார்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

02-09-2026 | 21:18


திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில், கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நவீன அங்காடி.

02-09-2026 | 21:18