உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.

07-09-2026 | 22:18


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் அருகே வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவன பள்ளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடியபடி குப்பைகளை அகற்றினர்.

07-09-2026 | 19:00


திருப்பூர், அனைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07-09-2026 | 16:07


திருப்பூரில், பா.ஜ சார்பில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கோரி கலெக்டரிடம் மனுக் கொடுத்தனர்.

07-09-2026 | 16:06


திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07-09-2026 | 16:05


திருப்பூர், அடுத்த அம்மாபாளையம பாறை குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

07-09-2026 | 16:05


திருப்பூர், குண்டடம், எஸ். கள்ளிவலசு பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்வு கோரி கலெக்டரிடம மனுக் கொடுக்க வந்த பொதுமக்கள்.

07-09-2026 | 16:05


வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

07-09-2026 | 16:04


பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடம் : ஊஞ்சவேலாம்பட்டி அருகே .

07-09-2026 | 16:04


பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிக்ஸ் பேக் விநாயகர் சிலை தயார் நிலையில் உள்ளது.

07-09-2026 | 16:04