இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, தமிழக பக்தர்கள் சார்பில் ஒன்பது வெண்பட்டு திருக்குடைகளை திருமலையில் இன்று( செப்.,18)ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டார். உடன், தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி., சுப்பராயுலு, தேவஸ்தான உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா.
18-09-2026 | 22:29
திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அருகே, பாப்பாங்குளத்தில் உள்ள கல் குவாரியை மூட வலியுறுத்தி, கிராமத்தினர் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18-09-2026 | 21:27
திருப்பூர் தொழில் வளம் பெருக, அதிமுக சார்பில், கோட்டைக்காடு ராஜ விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
18-09-2026 | 21:21
நிரந்தர பணியிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
18-09-2026 | 21:20
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனமாக முத்தண்ணன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்: கோவை, சுத்துவார் பேட்டை.
18-09-2026 | 21:20
கோவை பாலக்காடு மெயின் ரோடு மேற்கு புறவழி சாலை சந்திப்பில், நத்தை வேகத்தில் நடந்த வரும் மேம்பாலப் பணிகள்.
18-09-2026 | 21:19