உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆயுத பூஜை கொண்டாடியாச்சு.... இடம்:- திருப்பூர், மாஸ்கோ நகர்.

19-10-2026 | 14:43


மேலும் இன்றைய போட்டோ

தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் சுப்பா ராவ், மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜயை நேற்று சந்தித்தார். இடம்: தலைமை செயலகம், சென்னை.

22-10-2026 | 22:07


சென்னை மற்றும் புறநகர்பகுதிகளுக்கு கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவான்மியூரில் உயர்ந்த கட்டடங்களுக்கு பின்னால் திரண்டு நின்ற மேகக்கூட்டம்.

22-10-2026 | 22:07


 ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், வீடுகளிலும், தெருக்களிலும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண் விளக்குகளை தயாரிக்கும் மண்பாண்ட கலைஞர். இடம்: குருகிராம், ஹரியானா.

22-10-2026 | 22:07


கோவை வஉசி பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள கணித பூங்கா பராமரிப்பு இன்றி இருப்பதாக சில நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது புற்கள் நடும் பணி துவங்கியது.

22-10-2026 | 22:06


தஞ்சாவூர் பெ ரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1041வது சதய விழாவை முன்னிட்டு திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

22-10-2026 | 22:06


திருவண்ணாமலையை கடந்த மூன்று நாட்களாக கருமேகங்கள் மிரட்டிய நிலையில், இன்று வெண்மேகங்கள் அண்ணாமலையார் மலையை தழுவிச் சென்ற அழகு காட்சி

22-10-2026 | 21:53


திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றாததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

22-10-2026 | 21:52


சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில்,சென்னை திருவான்மியூரில் உயர்ந்த கட்டிடங்களுக்கு பின்னால் திரண்டு நிற்கும் மேகக்கூட்டம்.

22-10-2026 | 20:54


உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் நேரில் சென்று திடீர் சோதனை நடத்தினார்

22-10-2026 | 20:45