இன்றைய போட்டோ
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், வீடுகளிலும், தெருக்களிலும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண் விளக்குகளை தயாரிக்கும் மண்பாண்ட கலைஞர். இடம்: குருகிராம், ஹரியானா.
22-10-2026 | 22:07
மேலும் இன்றைய போட்டோ
நம் விமானப்படையின் 94வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கங்கை நதியின் மேல் விங்க்ஸ் ஓவர் கங்கா என்ற விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர்கள் சீறிப்பாய்ந்தன.
25-10-2026 | 06:41
துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடி முடித்த வடமாநிலத்தினர், அடுத்து தீபாவளியையொட்டி வரும் லட்சுமி பூஜை கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். மகாலட்சுமி தேவியின் சிலைகளை விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைத்த வியாபாரி. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
25-10-2026 | 06:35
கோவை பகுதியில் பெய்த கனமழையினால் கணுவாய் அருகே உள்ள தடுப்பணைகளில் நிரம்பி வழிந்த வெள்ளம்.
24-10-2026 | 22:54
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
24-10-2026 | 22:54
திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் முன்பு ரெஸ்டாரண்ட் அமைப்பதற்காக ரயில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:53
புதுச்சேரி காமராஜ் மணிமண்டபத்தில் அஞ்சு மண் அறிவு திருவிழா சார்பில் நடந்த கண்காட்சியில் பழம்பெரும் நாணயங்களை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்
24-10-2026 | 22:51
ஐக்கிய நாடுகள் தினத்தை ஒட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடிக்கு அருகே ஐ.நா., கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:50