இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடி முடித்த வடமாநிலத்தினர், அடுத்து தீபாவளியையொட்டி வரும் லட்சுமி பூஜை கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். மகாலட்சுமி தேவியின் சிலைகளை விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைத்த வியாபாரி. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
25-10-2026 | 06:35
கோவை பகுதியில் பெய்த கனமழையினால் கணுவாய் அருகே உள்ள தடுப்பணைகளில் நிரம்பி வழிந்த வெள்ளம்.
24-10-2026 | 22:54
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
24-10-2026 | 22:54
திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் முன்பு ரெஸ்டாரண்ட் அமைப்பதற்காக ரயில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:53
புதுச்சேரி காமராஜ் மணிமண்டபத்தில் அஞ்சு மண் அறிவு திருவிழா சார்பில் நடந்த கண்காட்சியில் பழம்பெரும் நாணயங்களை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்
24-10-2026 | 22:51
ஐக்கிய நாடுகள் தினத்தை ஒட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடிக்கு அருகே ஐ.நா., கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:50