உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பிதழ் பத்திரிகை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து கோவில் இணை ஆணையர் பரணிதரனிடம் சிவாச்சாரிகள் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஒப்படைத்தனர்.

25-10-2026 | 21:46


மேலும் இன்றைய போட்டோ

வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு டேங்கர் ரயில் மூலமாக கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணையை பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படுகின்றன.

26-10-2026 | 06:45


கோவையில் பெய்த கன மழையில் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஜி.கே.பி., என்க்லேவ் தனியார் அபார்ட்மெண்டில் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் சூழ்ந்த வெள்ளம்.

26-10-2026 | 06:44


மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.

25-10-2026 | 22:48


கோவையில் பெய்த பலத்த மழையினால் உக்கடம் பேருந்து நிலையம் முன் தேங்கியிருக்கும் மழை நீரை கடந்து செல்லும் மக்கள்.

25-10-2026 | 22:29


கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது இதனை சிரமத்துடன் கடக்கும் பொதுமக்கள். இடம்: உக்கடம்.

25-10-2026 | 22:29


கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட்.

25-10-2026 | 22:29


திருப்பூர்,வெள்ளியங்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.

25-10-2026 | 22:28


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமான பங்கேற்றனர்.

25-10-2026 | 22:17


சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

25-10-2026 | 22:17