உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.

29-10-2026 | 22:45


மேலும் இன்றைய போட்டோ

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் வறண்டு காணப்படும் கங்கை நதிக்கரையில் மிஷ்ரி மத் என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்னலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கும்பமேளாவுக்கு முன்னேற்பாடாக பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

01-11-2026 | 07:17


மஹாராஷ்டிராவின் மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வீடுகளை அலங்கரிக்க சாலையோர கடைகளில் இருந்து கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிய பொதுமக்கள்.

01-11-2026 | 07:11


ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதியில் விளையும் குங்குமப்பூ அதன் அடர் ஊதா நிறம், நறுமணம் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக உலகப்புகழ் பெற்றது. வயலில் பூத்துக்குலுங்கும் பூக்களை சேகரித்த பெண்.

01-11-2026 | 07:08


இந்தியாவின் குங்குமப்பூத் தலைநகராக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதி திகழ்கிறது. இங்கு விளையும் இந்த குங்குமப் பூ அதன் அடர் ஊதா நிறம், நறுமணம் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக உலகப் புகழ்பெற்றது. வயலில் பூத்துக் குலுங்கும் அப்பூக்களை ஆர்வத்துடன் சேகரிக்கும் பெண்.

31-10-2026 | 22:18


ஸ்ரீநகரில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற விழிப்புணர்வு பேரணியில், தேசியக்கொடியை ஏந்தி உற்சாகமாக பங்கேற்ற பாதுகாப்புப் படை வீரர்கள்.

31-10-2026 | 21:54


வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த இயற்கையின் கு(கொ)டை. இடம்: கோவை குற்றாலம்.

31-10-2026 | 21:29


முப்பெரும் விழா திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்லூரி தலைவர் ராமசாமி கேடயம் வழங்கினார்.

31-10-2026 | 21:29


வட மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளை ஒளிரவைக்கும் விளக்குகளுக்கு எப்போதும் முதன்மை இடம் உண்டு. மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, வீடுகளை அலங்கரிக்க சாலைவோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.

31-10-2026 | 20:36


குங்குமப்பூ தயாரிக்கப்படும் குரோக்கஸ் மலர்கள் ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் விளைகிறது. ஸ்ரீநகர் அருகே பாம்பூர் கிராமத்தில் குரோக்கஸ் மலர் அறுவடை மும்முரமாக நடக்கிறது.

31-10-2026 | 20:36