உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்தி அணை கரையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

30-10-2026 | 14:18


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.

12-11-2026 | 13:53


விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கணபதி நகர் பகுதியில் ஜானிபாய் வீட்டில் மர்மநபர்கள் உரிமையாளரை தாக்கி நகை பணம் திருடு போன வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

12-11-2026 | 13:53


குப்பை கொட்டினால் அபராதம் என்று மாநகராட்சி போர்டு வைத்தும் நம்மில் பலர் இப்படி குப்பை கொட்டி தீர்க்கும் இடம் : கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதி

12-11-2026 | 13:50


நொய்யலாற்றில் தொடர்ந்து வரும் மழைநீர் காரணமாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் பாய்ந்து வரும் வெள்ளம்.

12-11-2026 | 13:50


ரயில் வரும் வேளையில் இப்படி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள். இடம்: கோவை, வடகோவை.

12-11-2026 | 13:49


பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தாமல் இப்படி இடையில் நிறுத்தி சிரமம் அடையும் பயணிகள். இடம்: கோவை, டவுன்ஹால்

12-11-2026 | 13:49


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பத்மஜா வெளியிட்டார்.

12-11-2026 | 12:42


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

12-11-2026 | 12:20


ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.

12-11-2026 | 11:57