உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவர்கள்

30-10-2026 | 23:06


மேலும் இன்றைய போட்டோ

கோவை வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

02-11-2026 | 21:46


போனஸ் வழங்காத கோவை பாரதியார் பல்கலையை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை தொழிலாளர்கள்.

02-11-2026 | 20:27


தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான, குழுவினர் ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.

02-11-2026 | 20:15


கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் தீபஜோதியாய் ஜொலிக்க, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட தொழிலாளர். இடம்: வேடந்தவாடி.

02-11-2026 | 20:14


திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் உடுமலை அருகே மைவாடி நூலகம்.

02-11-2026 | 20:01


கடலூர் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடந்த ஹரித்ரா ஹரி சஹஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழாவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆன்மீக உபந்யாசம் நடந்தது.

02-11-2026 | 20:01


திருப்பூர், குமரன் ரோட்டில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

02-11-2026 | 20:00


டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் காரணமாக சென்னை நகரில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இன்றைக்காவது கடையை திறப்பார்களா? என காத்திருக்கும் மது பிரியர்கள்.

02-11-2026 | 19:29


டில்லி சண்முகானந்தா சங்கீத சபா சார்பில், பாரதிய வித்யா பவன் முனிஷி மெமோரியல் அரங்கில், மூன்றாமாண்டு என்.வி.சேஷாத்ரி நினைவு நாள் நிகழ்ச்சியில், காயத்ரி வெங்கட்ராகவன் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். மைசூர் ஸ்ரீகாந்த் – வயலின், சிவராமன் – மிருதங்கம், ஹரிஹரசுப்ரமணியன் – கடம், ரோஹித் – தம்புரா வாசித்தனர். இசைக் கலைஞர்களை, உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா கவுரவித்தார். உடன், சபா கவுரவ செயலர் கிருஷ்ணஸ்வாமி, இணை செயலர் கணபதி, நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்ரி மற்றும் மூத்த வழங்கறிஞர் உமாபதி.

02-11-2026 | 19:29