உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கிவிட்டு, களைப்பில் கொஞ்சம் ஓய்வெடுக்கும் மக்கள். இடம்: கோவை கிராஸ்கட் ரோடு

31-10-2026 | 18:40


மேலும் இன்றைய போட்டோ

தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான, குழுவினர் ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.

02-11-2026 | 20:15


கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் தீபஜோதியாய் ஜொலிக்க, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட தொழிலாளர். இடம்: வேடந்தவாடி.

02-11-2026 | 20:14


திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் உடுமலை அருகே மைவாடி நூலகம்.

02-11-2026 | 20:01


கடலூர் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடந்த ஹரித்ரா ஹரி சஹஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழாவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆன்மீக உபந்யாசம் நடந்தது.

02-11-2026 | 20:01


திருப்பூர், குமரன் ரோட்டில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

02-11-2026 | 20:00


டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் காரணமாக சென்னை நகரில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இன்றைக்காவது கடையை திறப்பார்களா? என காத்திருக்கும் மது பிரியர்கள்.

02-11-2026 | 19:29


டில்லி சண்முகானந்தா சங்கீத சபா சார்பில், பாரதிய வித்யா பவன் முனிஷி மெமோரியல் அரங்கில், மூன்றாமாண்டு என்.வி.சேஷாத்ரி நினைவு நாள் நிகழ்ச்சியில், காயத்ரி வெங்கட்ராகவன் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். மைசூர் ஸ்ரீகாந்த் – வயலின், சிவராமன் – மிருதங்கம், ஹரிஹரசுப்ரமணியன் – கடம், ரோஹித் – தம்புரா வாசித்தனர். இசைக் கலைஞர்களை, உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா கவுரவித்தார். உடன், சபா கவுரவ செயலர் கிருஷ்ணஸ்வாமி, இணை செயலர் கணபதி, நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்ரி மற்றும் மூத்த வழங்கறிஞர் உமாபதி.

02-11-2026 | 19:29


அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பிகார் மாநிலம் புத்தகயாவிற்கு செல்ல உகந்த வானிலை நிலவும் காலமாகும். இந்தக் காலகட்டத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளும் பௌத்தத் துறவிகளும் வருகை தருவர். இந்த தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக மகாபோதி கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

02-11-2026 | 19:29


துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, டில்லி முதல்வர் ரேகா குப்தா மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

02-11-2026 | 19:16