இன்றைய போட்டோ
வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் திறப்பு விழா, கோவை காந்திபுரம் 100அடி ரோட்டில் நேற்று நடந்தது. இதில் (இடமிருந்து) வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் நிர்வாகி உம்மிடி சண்முகபிரியா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஷ், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜிதேந்திர உம்மிடி, அமரேந்திரன் உம்மிடி, சிதாஷ் உம்மிடி மற்றும் செயல் இயக்குநர் தியா உம்மிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
01-11-2026 | 23:46
மேலும் இன்றைய போட்டோ
வாகன ஓட்டிகளின் கண்ணை கூசும் வகையில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளம்பர பேனர்கள். இடம்: கோயம்பேடு மேம்பாலம்
02-11-2026 | 22:32
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
02-11-2026 | 22:32
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-11-2026 | 21:58
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-11-2026 | 21:57
முரசு புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்குள் இருந்த படகுகள் கிரேன் உதவியுடன் பத்திரமாக கரையில் எடுத்து வைக்கப்பட்டது.
02-11-2026 | 21:57