உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சாயல்குடி பேரூராட்சி அங்காளேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் ரோடு சேதமடைந்துள்ளது.

12-11-2026 | 17:44


மேலும் இன்றைய போட்டோ

கடலுார் லாரன்ஸ்ரோட்டில் ஓம் சிவசக்தி டைம்ஸ் உரிமையாளர் செல்வகுமார் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மகன் ரஜினி விக்னேஷ், அன்னதானம் வழங்கினார்.

12-11-2026 | 16:52


மழையின்றி காணப்பட்டதால், அடுத்த மழை வரும் முன் உற்பத்தி செய்த உப்புகளை விற்பனை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள். இடம்: ஆத்தூர், தூத்துக்குடி

12-11-2026 | 15:37


ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யாமல் கற்கள் வைத்து மூடப்பட்ட இடம்: சேரன்நகர், காந்தி நகர்.

12-11-2026 | 15:36


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் உள்விளையாட்டு அரங்கம்.

12-11-2026 | 15:35


கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி பகுதியில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே இருந்த கடையில் மோதிய விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்.

12-11-2026 | 15:34


விழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டார்.

12-11-2026 | 15:34


காரைக்காலில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களை கரையேறும்படி எச்சரித்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டன.

12-11-2026 | 15:34


சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்போது மாடுகளின் கூடாரமாக மாறிவருகிறது.

12-11-2026 | 15:33


உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

12-11-2026 | 15:32