உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டை மற்றும் கேக்குகளை வாங்கிய மகிழ்ச்சியில் குழந்தைகள். இடம்.உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

13-11-2026 | 10:55


மேலும் இன்றைய போட்டோ

தேனி வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள புளூ பெல் பூ. இடம்: கோவை வேளாண் பல்கலை வளாகம்.

13-11-2026 | 09:18


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான நேற்று, திருவண்ணாமலை கிரிவலப் பாதை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

12-11-2026 | 22:49


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 8 தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டார்.

12-11-2026 | 22:44


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது..

12-11-2026 | 22:44


திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கு கபடி போட்டி நடந்தது. இதில் ஆக்ரோஷமாக விளையாடிய மாணவிகள்.

12-11-2026 | 22:44


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

12-11-2026 | 22:44


முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்பு குழுவினர்.

12-11-2026 | 22:44


கோவில் வாசலில் வள்ளி கும்மி நடனம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளான்று( நவம்பர் 12) கோவில் வளாகத்தில் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சி நடந்தது.

12-11-2026 | 22:43


மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் நால்ரோடு அருகே பிரதான குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் செல்கிறது.

12-11-2026 | 21:57