உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை பகுதியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடந்த சைக்கிள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சீறிபாய்ந்த சிறுவர்கள்.

14-11-2026 | 16:21


மேலும் இன்றைய போட்டோ

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் சஷ்டி வழிபாடு நடந்தது.

14-11-2026 | 16:16


ராமநாதபுரம் நாடார் தெருவை ஆக்கிரமித்த டூவீலர்களால் அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.

14-11-2026 | 16:16


ராமநாதபுரம் - தேவிபட்டினம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.

14-11-2026 | 16:16


அசாம் மாநிலம் கவுஹாத்தியில் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர்

14-11-2026 | 16:10


சர்வதேச நீரிழிவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு, ‘இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ஆய்வுச் சங்கம்’ டில்லி இந்தியா கேட் பகுதியிலிருந்து நடத்திய விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

14-11-2026 | 16:04


சின்ன காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த விளக்கு பூஜையில், பால விநாயகர், பாலமுருகனுடன், அய்யப்ப சுவாமி, புலிவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

14-11-2026 | 15:34


கந்த சஷ்டி விழா 5 நாள் முன்னிட்டு வாடா மல்லி மலர் மாலை அலங்காரத்தில் எழுந்தருளிய வல்லக்கோட்டை முருகன்.

14-11-2026 | 15:04


திருப்பூர், சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளித்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

14-11-2026 | 14:35


புதுச்சேரியில் பனிக்காலத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட கம்பளி போர்வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது

14-11-2026 | 14:34