உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி பால்காவடி ஏந்தி தேனாம்பேட்டை முருகன் கோவிலுக்கு வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

15-11-2026 | 17:26


மேலும் இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி பால்காவடி ஏந்தி தேனாம்பேட்டை முருகன் கோவிலுக்கு வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

15-11-2026 | 17:26


கள்ளக்குறிச்சி கல்லை தமிழ் சங்கம் சார்பில் நூல் வெளியீடு மற்றும் தமிழ்ச் செம்மல் விருது பாராட்டு விழா நடைபெற்றது.

15-11-2026 | 14:45


அக்வான் புயல் உருவானதை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

15-11-2026 | 14:45


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை வர சக்தி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி கவசம் படிக்கும் பக்தர்கள் .

15-11-2026 | 14:45


திருப்பூரில், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் சார்பில், நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எழுத்தறிவு தேர்வு நடந்தது.

15-11-2026 | 14:45


திருப்பூர், காலேஜ் ரோட்டில், தார்சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

15-11-2026 | 14:44


கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிப்பதற்காக உடுமலை வ.உ.சி. வீதி கடைகளில் விற்பனைக்கு தொங்க விடப்பட்டுள்ள மாலைகள்.

15-11-2026 | 14:44


புதுச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவு நீர் வழிந்து ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கு வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது

15-11-2026 | 14:43


விழுப்புரம் அடுத்த தென்னமாதேவியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

15-11-2026 | 14:43