இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் சுவாமிநாத சுவாமி சேவா சமாஜம் இணைந்து, டில்லி ராமகிருஷ்ணாபுரம் உத்தர சுவாமிமலை கோவிலில் நடத்திய கந்த சஷ்டி விழாவில், ஸ்ரீதர் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். சித்தேஷ் கணேஷ் – வயலின், ராதுல் குமார் – மிருதங்கம் வாசித்தனர். சமாஜம் துணைத் தலைவர் சுவாமிநாதன், சபா கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
15-11-2026 | 19:04
ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் முருகன், சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
15-11-2026 | 18:54
புயல் எச்சரிக்கை காரணமாக கிரேன் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்படும் பைபர் படகுகள். இடம்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.
15-11-2026 | 17:37
புயல் சின்னம் காரணமாக காசிமேட்டில் மீன் வாங்க வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
15-11-2026 | 17:36
புயல் எச்சரிக்கை காரணமாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள். இடம்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.
15-11-2026 | 17:34
சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டத்திற்கு இடையே செல்லும் ரயில். இடம்: அம்பத்தூர்.
15-11-2026 | 17:33
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள். இடம்: அண்ணா நகர் ரவுண்டானா
15-11-2026 | 17:33