இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்தார்.
16-11-2026 | 18:44
கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16-11-2026 | 18:43
கடலூரில் கார்த்திகை 1 தேதியை முன்னிட்டு ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் மாலை போடுவதற்காக ஐயப்பன் மாலைகளை வாங்குகின்றனர்.
16-11-2026 | 18:43
மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான நிலுவைத் தொகையை ஆறு மாதங்களாக வழங்காததை கண்டித்து விவசாயிகள் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்...
16-11-2026 | 18:42
கந்தசஷ்டி விழாவையொட்டி திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர்.
16-11-2026 | 18:04
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மின்வளத்துறை சார்பில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் படகில் சென்று எச்சரிக்கை விடுத்தனர்.
16-11-2026 | 17:54