உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அக்வான் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

18-11-2026 | 17:37


மேலும் இன்றைய போட்டோ

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பகுதியில் இரை தேடி கூட்டமாக வட்டமிடும் மஞ்சள் மூக்கு நாரைகள் கூட்டம்.இடம் : பள்ளிக்கரணை

18-11-2026 | 17:37


திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தில் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு செட்டுகள் அமைக்காததால் ஏலம் எடுத்தவர்கள் முன்வரவில்லை. வாகனங்கள் மழை வெயிலில் நிற்கும் அவல நிலை

18-11-2026 | 17:36


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் நகராட்சி சார்பில் கொசுக்களால் டெங்கு மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க வீட்டில் பழைய பொருட்கள் வைக்க வேண்டாம் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது

18-11-2026 | 17:34


ரேடியல் சாலையில் கீழ்க்கட்டளை மேம்பாலம் மேலே சோழிங்கநல்லூர் - பரங்கிமலை வழித்தடத்தின் மெட்ரோ மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கீழ்க்கட்டளை

18-11-2026 | 17:33


சிவகங்கை வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் 1 கிலோ 150 க்கு விற்பனை ஆனது.

18-11-2026 | 17:33


அயப்பாக்கம் வி.ஜி.என் தனியார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சுந்தர விநாயகர் கோவில் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய் துறையினர் முன்னிலையில் இடிக்கப்பட்டது.

18-11-2026 | 17:33


ஆத்தூர் ரயில் நிலையத்தில் ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளங்களை கடக்கும் மக்கள். இதனால் அங்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது

18-11-2026 | 17:32


அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே, பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இடம்: ரயில்வே சாலை.

18-11-2026 | 17:32


அம்பத்தூர் ஏரியில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள். இடம்: அயப்பாக்கம்.

18-11-2026 | 17:32