உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேனி, தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு கண்காணிப்பு குழுவின் தலைவர் முன்னாள் டிஜிபி திரிபாதி சிறையில் ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சிறைத்துறை ஏடிஜிபி சங்கர்.

18-11-2026 | 18:28


மேலும் இன்றைய போட்டோ

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

18-11-2026 | 18:25


மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவுவாயில் அருகே ரயில்வே மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

18-11-2026 | 18:16


இந்தியா– சீனா இடையே, 1962ம் ஆண்டு நவம்பர் 18ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, ரெசாங் லா போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, வீரர்களின் தியாகத்தை போற்றி, டில்லி, பா.ஜ., முதல்வர் ரேகா குப்தா அஞ்சலி செலுத்தினார்.

18-11-2026 | 17:52


ஆந்திரப் பிரதேசத்தில் ‘அக்வான்’ புயல் கரையை நெருங்கி வருவதையொட்டி, விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடலோரப் பகுதிக்குச் செல்லாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

18-11-2026 | 17:52


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. உள்படம்: அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.

18-11-2026 | 17:51


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது, 11 நாட்களுக்கு எரியும்; மேலும், 30 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, வழிபாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.

18-11-2026 | 17:50


நன்மங்கலம் ஏரி பகுதியில் உள்ள மரக்கம்புகளின் மீது வரிசையாக அமர்ந்து ஓய்வெடுக்கும் நீர் காகங்கள் மற்றும் உணவை தேடி சுற்றி திரியும் கூழைக்கடா கொக்குகள்

18-11-2026 | 17:38


சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பகுதியில் இரை தேடி கூட்டமாக வட்டமிடும் மஞ்சள் மூக்கு நாரைகள் கூட்டம்.இடம் : பள்ளிக்கரணை

18-11-2026 | 17:37


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அக்வான் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

18-11-2026 | 17:37