உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

18-11-2026 | 19:58


மேலும் இன்றைய போட்டோ

பல நாட்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சி பொருளாக கிடக்கும் கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா.

18-11-2026 | 20:01


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை, குட் ஷெட் ரோடு தபால் நிலையத்தில் கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

18-11-2026 | 20:01


திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் அகற்றப்பட்டுள்ள ஆகாயதாமரை.

18-11-2026 | 20:01


பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கத்தை, தமிழக முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.

18-11-2026 | 20:00


ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இடம்: சிவானந்தா சாலை.

18-11-2026 | 20:00


தமிழகத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாமலே இணையதளம் வாயிலாக புகார் அளித்து ரசீது பெறும் வசதியை தமிழக காவல்துறை டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.

18-11-2026 | 19:59


சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.

18-11-2026 | 19:58


சிவகங்கை தினசரி மார்கெட் ரோட்டில் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ள குப்பைகள்.

18-11-2026 | 19:57


சிவகங்கை அருகே கண்டனிபட்டி பகுதியில் மழை இன்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

18-11-2026 | 19:57