உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மீண்டும் ஊட்டி மலை ரயில் பயணத்தைத் தொடங்கியது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது.கடந்த மாதம் பெய்த கனமழையால், ரயில் பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், மண் சரிவு ஏற்பட்டது. பாதையில் இருந்த மண், பாறைகள் அகற்றிய பின்பு, 26 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் ஊட்டிக்கு மீண்டும் மலைரயில் சேவை தொடங்கியது.

19-11-2026 | 19:04


மேலும் இன்றைய போட்டோ

இங்கேயும் ஆரம்பிச்சுட்டாங்களா...: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் அருகே மெயின் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து தள்ளுவண்டி, டூவீலர் ஒர்க் ஷாப், கரும்பு ஜூஸ் கடைகள் வந்துவிட்டன. அடுத்து என்ன கடை வரப்போகிறதோ.

19-11-2026 | 17:46


கொளுத்தும் வெயிலுக்கும், திடீர் மழைக்கும் பாதி ரோடு காணாமல் போய்விட்டதோ. இடம்: மதுரை குருவிக்காரன்சாலை – ஓபுளாபடித்துறை சர்வீஸ் ரோடு.

19-11-2026 | 17:46


சூரிய உதயத்தின் போது அடர்ந்த மூடுபனிக்கு இடையே நீர்நிலையில் நீந்தும் வாத்து. டில்லியில் இந்தப் பருவத்தின் இதுவரையிலான மிகக் குளிரான காலை நேற்று பதிவானது; குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட குறைந்து 10.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

19-11-2026 | 17:42


நம் அண்டை நாடான சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷென்ஷென் நகரில் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு நடக்கிறது. இதையொட்டி நடந்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின்.

18-11-2026 | 22:51


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ல் நடக்கிறது. அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபமானது, 11 நாட்களுக்கு எரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.

18-11-2026 | 22:50


வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாஇடையே நாளை மறுநாள்( நவம்பர் 19) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

18-11-2026 | 22:50


காஷ்மீரின் குல்காம் மாவட்டம், தேவ்சர் ஜங்கல்போரா கிராமத்தில் ராணுவத்தினருடன் நீண்ட நேரம் நடந்த சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி லத்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை வெற்றி சைகை காட்டி கொண்டாடிய ராணுவத்தினர்.

18-11-2026 | 22:50


ஊட்டி அருகே எம்.பாலாடா பகுதியில் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த ஆறு தூர்வாராத காரணத்தால் ஓடை போல மாறியதால், இங்குள்ள விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவமதிப்படும் சூழல்.

18-11-2026 | 22:50


கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உடன் கலெக்டர், வந்தனா கார்க் எஸ்பி உதயகுமார், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.

18-11-2026 | 22:50