உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை ரிசர்வ்லைன் – வண்டிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்துவதாலும், கடை விளம்பர போர்டுகள் வைப்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

20-11-2026 | 18:52


மேலும் இன்றைய போட்டோ

உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.

20-11-2026 | 18:36


முகத்தில் முகம் வைத்து... வீட்டின் ஜன்னலில் தனது முகத்தை பார்த்து கொத்திய தேன் சீட்டு பறவை. இடம்: நாடார் தெரு, ராமநாதபுரம்.

20-11-2026 | 17:10


கோவை பீளமேடு அண்ணா நகர் பூவை ஈஸ்வரன் விநாயகர் கோயில் முதல் கும்பாபிேஷக விழாவை ஒட்டி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகர்.

20-11-2026 | 12:46


காலை பனியில் தென்னை மரங்களுக்கு இடையே காணப்படும் ஆதவன். இடம்: உடுமலை.

20-11-2026 | 10:50


உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட களத்தில் காய வைக்கப்பட்டுள்ள பாக்குகள்.

20-11-2026 | 07:48


சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகம் முழுவதும், கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20-11-2026 | 07:42


கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைகுகை வழியாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள், இதமான காற்றில், இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் பயணிக்கும் தருணம். அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகளை நிச்சயம் பதிவு செய்யும்.

19-11-2026 | 23:06


கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு பசுமையான தேயிலை எஸ்டேட். இதனிடையே வளைந்த நெளிந்து செல்லும் பாதையில் டீ கோப்பையுடன் போட்டோ எடுக்க வசதியாகவரவேற்கும் செல்பி பாயின்ட். இடம்: மாணிக்கா எஸ்டேட், வரலாறு.

19-11-2026 | 23:06


ஒடிசா மாநிலம் புரி கடற்கரைப் பகுதியில் இன்று பகல் 'அக்வான்' புயல் கரையைக் கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையொட்டி, கடலோரக் கடைகள் பாலிதீன் தாள்களால் மூடப்பட்டுள்ளன.

19-11-2026 | 23:06