இன்றைய போட்டோ
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜீவல்லரியின், தங்க சேமிப்பு திட்டமான டிஜி கோல்ட் மற்றும் சூப்பர் பிளக்ஸி 360 திட்டத்தை, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ். ராஜரத்தினம் நேற்று துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர் யோகேஷ் ரத்னம்,லாக்ஷினி ரோஷன் மற்றும் இயக்குனர் ரோஷன். இடம் : போரூர் சென்னை.
20-11-2026 | 19:37
மேலும் இன்றைய போட்டோ
மதுரை ரிசர்வ்லைன் – வண்டிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்துவதாலும், கடை விளம்பர போர்டுகள் வைப்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
20-11-2026 | 18:52
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாத்பூர் பகுதியில், ‘அக்வான்’ புயல் கரையைக் கடந்தபோது பெய்த இடைவிடாத கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது.
20-11-2026 | 18:40
உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.
20-11-2026 | 18:36
முகத்தில் முகம் வைத்து... வீட்டின் ஜன்னலில் தனது முகத்தை பார்த்து கொத்திய தேன் சீட்டு பறவை. இடம்: நாடார் தெரு, ராமநாதபுரம்.
20-11-2026 | 17:10