இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வேலை நிறுத்தம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்துவிசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
23-11-2026 | 16:42
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
23-11-2026 | 16:42
பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமர்ஸ் கனெக்ட்-26 வணிகவியல் திறன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் ஸ்டெல்லா தலைமையில் பரிசு வழங்கி கவரவிக்கப்பட்டனர்.
23-11-2026 | 16:41
சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை டி. வி.பட்டிணம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியில் நடந்த சிறப்பு பஜனையில் கலந்து கொண்ட பக்தர்கள் .
23-11-2026 | 16:41
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாள் காலை உற்சவத்தில், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
23-11-2026 | 16:02
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாள் காலை உற்சவத்தில், மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
23-11-2026 | 16:02
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்ற தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் போது அடிவாரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதித்த போலீசார்.
23-11-2026 | 16:01