இன்றைய போட்டோ
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, இந்த ஆண்டு பௌர்ணமி கிரிவலம் தொடங்கிவிட்டது. இதனால் சித்தர்கள் உலவும் புண்ணிய பூமியான கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன், மலையே மகேசனாகக் காட்சியளிக்கும் அண்ணாமலையைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
24-11-2026 | 18:16
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தில், நேற்று, சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திரளான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
24-11-2026 | 17:36
தாம்பரம் வேளச்சேரி முகுந்த் வரதராஜன் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இடம் :கிழக்கு தாம்பரம்
24-11-2026 | 17:27
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தரிசனத்திற்காக மலை ஏறிய பக்தர்கள்.
24-11-2026 | 17:26
மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
24-11-2026 | 17:26
சென்னையில் காலை முதல் பெய்த லேசான சாரல் மழையால் நண்பகல்வரை நீடித்த பனி மூட்டம் காரணமாக புகை மூட்டமாக காட்சியளிக்கும் கடற்கரை.இடம் : பெசன்ட் நகர்
24-11-2026 | 17:25