உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டில்லி பங்களா சாஹிப் குருத்துவாரா குளத்தில் புனித நீராடிய சீக்கியர்கள்.

24-11-2026 | 19:38


மேலும் இன்றைய போட்டோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் பண்டா பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடை வாசல்களிலேயே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மது அருந்த வருபவர்களைப் பரிசோதித்து, உங்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கல்லீரல் பாதிப்பு அதிகமாக உள்ளது; இன்னும் குடித்தால் பாதிப்பு மேலும் கூடும் என்று எடுத்துக்கூறி, அவர்களைத் திருத்தி வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வருகின்றனர்

24-11-2026 | 19:42


மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

24-11-2026 | 19:21


சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழல் உருவானது.இடம்: அரும்பாக்கம்.

24-11-2026 | 19:21


கார்த்திகை தீபம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

24-11-2026 | 19:19


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி ரதத்தில் அருள்பாலித்தார்.

24-11-2026 | 19:19


கோவில் பிரகாரத்தை சுற்றி அகல் தீபம் சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். கார்த்திகை தீப விழா சோமேஸ்வரர் கோவில் ஆலத்தூர்.

24-11-2026 | 19:18


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கீழ்பெரும்பாக்கம் அருளாம்பிகை உடனுறை பசுபதிஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

24-11-2026 | 19:17


கார்த்திகை திருநாளை முன்னிட்டு, டவுன்ஹால் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

24-11-2026 | 19:16


கார்த்திகை தீப திருநாளான இன்று குன்றத்தூர் முருகன் கோவிலில் தீபத்தூனில் தீபம் ஏற்றினர்.

24-11-2026 | 19:15