இன்றைய போட்டோ
1990-களின் தொடக்கத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்த பூர்வீகக் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். இதன் காரணமாக, ஸ்ரீநகரின் பழைய நகரப் பகுதிகளில் இருந்த பல பழமையான கோயில்களில் வழிபாடுகள் நின்று போயின.அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ துர்கேஸ்வரி கோயிலில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்ற சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; அப்போது பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
24-11-2026 | 19:42
மேலும் இன்றைய போட்டோ
மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
24-11-2026 | 19:21
சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழல் உருவானது.இடம்: அரும்பாக்கம்.
24-11-2026 | 19:21
கார்த்திகை தீபம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
24-11-2026 | 19:19
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி ரதத்தில் அருள்பாலித்தார்.
24-11-2026 | 19:19
கோவில் பிரகாரத்தை சுற்றி அகல் தீபம் சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். கார்த்திகை தீப விழா சோமேஸ்வரர் கோவில் ஆலத்தூர்.
24-11-2026 | 19:18