உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை மாட்டுத்தாவணி டி.எம்.நகர் மெயின்ரோட்டில் கற்கள் பரப்பப்பட்டு பல நாட்களாகியும் பணி நடக்காததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

25-11-2026 | 18:37


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு வீரவாழியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீரவாழியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

25-11-2026 | 18:24


கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள குந்தம்பாக்கம் பேருந்து நிலையம்

25-11-2026 | 18:24


திண்டுக்கல்லில் பெய்த சாரல் மலையில் குடை பிடித்து சென்ற வாகன ஓட்டி.

25-11-2026 | 18:23


மழையை ரசித்தபடி ரோட்டில் வரும் பள்ளி மாணவர்கள் இடம்.உடுமலை

25-11-2026 | 18:23


கோவளம் - கேளம்பாக்கம் சாலையில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் உப்பங்கழியில் மேகக்கூட்டங்கள், அலையாத்திக் காடுகளுக்கு இடையே சிறு படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.இடம் : கேளம்பாக்கம்

25-11-2026 | 18:23


முட்டுக்காடு படகு குழாம் அருகே முகத்துவாரம் பகுதியில் இரை தேடி கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரைகள், நீர் காகம் மற்றும் உள்ளான்கள்.இடம் : முட்டுக்காடு

25-11-2026 | 18:21


தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானத்தில் மேகங்கள் பஞ்சு போல் ரம்யமாக காட்சியளித்தது இடம்: தாம்பரம் மேம்பாலம்

25-11-2026 | 18:20


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக சி விஜில் 2026 இரண்டு நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை முதல் நாள் சென்னை காசிமேட்டில் காவல்துறையினர் கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

25-11-2026 | 18:19


மாவட்ட கலெக்டருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ.,விவகாரத்தை மறைக்க முயன்றதாக தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க., சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புகார் அளித்துள்ளார்.

25-11-2026 | 18:02