உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபத்துாணில் தீபம் ஏற்றுவதுத் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு பின்பற்றாததை கண்டித்து, தமிழக பாஜ வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

25-11-2026 | 19:50


மேலும் இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் அலுவலகத்தினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

25-11-2026 | 19:53


கோவையிலுள்ள மாநகராட்சி பூங்காக்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடம்: வடவள்ளி.

25-11-2026 | 19:53


சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்ட காவலர்கள்.

25-11-2026 | 19:52


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நடந்து வரும் ராஜா ரவி வர்மாவின் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.

25-11-2026 | 19:52


சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

25-11-2026 | 19:48


கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திமுக மகளிர் அணி சார்பில் எம்எல்ஏ அருண் விக்னேஷை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

25-11-2026 | 19:48


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது.

25-11-2026 | 19:47


கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம்.நகர், தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

25-11-2026 | 19:47


மதுரை மாட்டுத்தாவணி டி.எம்.நகர் மெயின்ரோட்டில் கற்கள் பரப்பப்பட்டு பல நாட்களாகியும் பணி நடக்காததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

25-11-2026 | 18:37