இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பின் நிறைவு நாளான நேற்று சுவாமியை தரிசனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
26-11-2026 | 20:29
தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரில் உள்ள தியான மையத்தில் நடைபெற்ற சர்வதேச விளக்குத் திருவிழாவில், பங்கேற்பாளர்கள் காகித விளக்குகளை வானில் பறக்கவிட்டனர். வானில் ஒளிர்ந்த விளக்குகளின் பிம்பங்கள் கீழே இருந்த தண்ணீரில் எதிரொலித்தது அந்த நேர இரவுக் காட்சிக்கு மேலும் மெருகூட்டியது.
26-11-2026 | 18:31
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், அம்மாநிலத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற கைவினை கண்காட்சியில், வண்ணம் தீட்டப்பட்ட காகிதக் கூழலான கலைப்பொருளைக் கையில் ஏந்தியுள்ளவர்.
26-11-2026 | 18:30
திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஒட்டிகள். இடம், பழநி ரோடு.
26-11-2026 | 18:00
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் அரசியல் அமைப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்தது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குளம் அகமது மிர், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
26-11-2026 | 17:53
பல லட்சம் போட்டும் பலனில்லை என்பதற்கு தகுந்தாற் போல கோவை பாரதியார் பல்கலையில் வீணாக கிடக்கும் நீச்சல் குளம்.
26-11-2026 | 17:36
தாம்பரம் நடைபாதை சுரங்க பாதை பல லட்ச ரூபாய் செலவில் சீரமைப்புகள் செய்யப்பட்ட நிலையில் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவானதால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது
26-11-2026 | 17:35